Amphan : வங்கக்கடலில் உருவாகியுள்ள 2வது சூப்பர் புயல்

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த Amphan புயல் நாளை மேற்கு வங்கம் மாநிலத்தில் கரையை கடக்கவுள்ளதால் அப்பகுதிகளில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழுப்பெற்று புயலாக உருவெடுத்துள்ளது.

நேற்று முந்தினம் அதிதீவிரப்புயலாக இருந்த Amphan புயல், நேற்று சூப்பர் புயலாக வலுப்பெற்றுள்ளது.

தற்போது இந்த Amphan புயலானது மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில், கொல்கத்தாவில் இருந்து 690 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் மேலும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் மாநிலத்தில் நாளை மாலை அல்லது இரவு தீவிர புயலாக கரையை கடக்கவுள்ளது.

இந்த புயல் காரணமாக ஒடிஸா மாநிலத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும் வரை பலத்த மழைப் பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ராக், ஜஜ்பூர், பாலசோர், கட்டாக், மயூர்பஞ்ச், கோர்தா மற்றும் பூரி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புயல் கரையைக்கடக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் 165 முதல் 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும்,;

இதனால் அங்குள்ள கடலோர மாவட்டங்களான கிழக்கு மெடினிபூர், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள், ஹவுரா, ஹூக்லி, கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒடிஸா மாநிலத்தில் பலப்பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக மழைப்பெய்யத் தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் சில பகுதகளில் தற்போதே பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கிவிட்டது.

இதனை தொடர்ந்து புயல் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 32 குழுக்கள் இரண்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு 21 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மேற்கு வங்கத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள 3 லட்சம் பேரை நிவாரண முகாம்களில் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒடிஸாவில் 11 லட்சம் பேரை பாதுகாப்பாக தங்க வைக்கக்கூடிய அளவுக்கு முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த Amphan புயல் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே