வங்க கடலில் உருவான Amphan புயல் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே அம்பன் புயல் கரையை கடந்தது.

இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதாகவும் சுமார் 4 மணி நேரம் இந்த புயல் கரையை கடந்ததாகவும், கரையை கடக்கும்போது மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தின் பல பகுதிகளை சூறை ஆடி விட்டு இந்த Amphan புயல் சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த புயலால் மேற்கு வங்கத்திலும் வங்கதேச நாட்டிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சேதம் குறித்த விபரங்கள் தற்போது கணக்கு எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் புயல் கரையை கடந்த போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ஒரு வீடியோவில் வலுவிழந்த கட்டிடம் ஒன்று உதிர்ந்து விழுவது போலவும் அருகில் இருந்த கார்கள் பல்டி அடித்து சென்றது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, வானிலை மையம் கூறியுள்ளதாவது : சூப்பர் புயல் Amphan, சற்று வலு குறைந்து, மிக தீவிர புயலாக, வங்கக் கடலில் சுழன்றது.

இது, நேற்று இரவில், கோல்கட்டாவுக்கு தென் கிழக்கே, 400 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது.

இன்று புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

இதனால் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தின் பல பகுதி கள் சேதமடைந்ததாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

Amphan புயல் காரணமாக, வங்கக் கடலில் அலைகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட்டன.

அந்தமான் நிகோபார் முதல், வங்கதேசம் வரையில், வங்கக் கடலுக்குள் மீனவர்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் உள்ளிட்டவை செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

புயல் கரையை கடந்ததும், கடல் தட்ப வெப்பநிலை மற்றும் நிலப் பகுதிகளில் நிலவும் அசாதாரண வானிலை, நாளை முதல் படிப்படியாக சீராகும் என தெரிவித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே