கரோனா வைரஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

கரோனா வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் அதற்கான தடுப் பூசியை அனைவருக்கும் இலவச மாக செலுத்த வேண்டும் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது:

கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்து, ஊதியம் குறைக்கப்பட்ட நிலையில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கிராமப் புறங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்கள் அன்றாட உணவுக்கே அல்லாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. இதுவரை 1 சதவீதத் துக்கும் குறைவான மக்களே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நாட்டில் ஒருவருக்கு தடுப்பூசி போட ரூ. 250 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரேசில், கனடாஉள்ளிட்ட நாடுகளில் பொதுமக் களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப் படுகிறது. இதனால் அங்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் சத வீதம் அதிகமாக உள்ளது.

இந்தியாவிலும் கரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த உத்தரவிட்டால் நாட்டு மக்கள் மிகவும் பயன் அடைவார்கள். கரோனா வைரஸ் தொற்றையும் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு கரோனா தடுப்பூசியை இலவசமாக்க வேண்டும். இதற்கான நிதியைபிரதமர் நிவாரண நிதியிலிருந்து பெறலாம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே