ஏப்ரல் 1 முதல் பெங்களூரு வருவோருக்கு கரோனா வைரஸ் தொற்று நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கர்நாடகாவில் கடந்த நவம்பர் மாதத்துக்கு பின் கடந்த இரு தினங்களாக நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் சுமார் 1,500 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோயாளிகளில் 60 சதவீதம் பேர் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

இதனால் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருவோர் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்டி – பிசிஆர் சோதனை சான் றிதழ் கொண்டு வருவது கட்டாயமாகிறது. சான்றிதழ் இல்லாமல் வருவோருக்கு எல்லையில் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் தொற்று கண்டறியப்பட்டால் வீட்டுத் தனிமைக்கோ, அரசின் தனிமைப்படுத்தல் முகாமுக்கோ அழைத்துச் செல்லப்படுவார்கள்.

நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட் டாலோ, அளவுக்கு அதிகமான ஆட்களை அனுமதித்தாலோ அபராதம் விதிக்கப்படும் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே