ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு

ஏப்.,1ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் ஜன.,16 முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏப்.,1ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறுகையில், ‘ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

தகுதியுள்ள அனைவரும் பதிவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்,’ என்றார். நாடு முழுவதும் 4.84 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே