பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

47 வயதான சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்டுகள், 463 ஒருநாள், 1 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களும் எடுத்துள்ளார். 2013-ல் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் ட்விட்டரில் சச்சின் இன்று கூறியதாவது:

கரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனையில் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்கள் கூறிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். எனக்கு உதவும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என சச்சின் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே