ரயிலில் பயணம் செய்யும் போது கொரோனா – கிளம்பியது புது சர்ச்சை

டெஹ்ராடூன் ஜன் சதாப்தி விரைவு ரயில் பயணிகள் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். காரணம் இவர்களுடன் பயணித்த ஒருவருக்கு கரோனா பாசிட்டிவ் என்ற தகவல் வந்ததையடுத்து இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா பாசிட்டிவ் என்ற தகவல் வந்த நபர் உத்தராகண்ட் ரிஷிகேஷ் டவுனில் உள்ள ஷ்யாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.

இதனையடுத்து அவர் கோவிட்-19 கட்டுப்பாட்டு அறையை போனில் தொடர்பு கொண்டு இந்தத் தகவலை தெரிவிக்கும் போது மற்ற பயணிகள் இவர் பேசுவதைக் கேட்டு பீதி அடைந்தனர்.

கரோனா நோயாளியான அந்த நபருக்கு வயது 48. நொய்டாவில் உள்ள பேட்டரி தயாரிப்பு நிறுவனத்தில் அவர் பணியாற்றி வருகிறார். இவர் ஞாயிறன்று காஸியாபாத்தில் டெஹ்ராடூன் செல்லும் ரயிலில் பயணித்தார். இவரது டெஸ்ட் அறிக்கை வராத நிலையில் இவர் எப்படி பயணிக்க அனுமதிக்கப்பட்டார் என்பது சர்ச்சையாகியுள்ளது.

கடைசியில் இந்த நபர் ஹரித்வாரில் உள்ள மேளா மருத்துவமனையின் தனிமைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இவருடன் பயணித்த 22 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹரித்வார் மாவட்டம் ரூர்கீ நிலையத்தை நெருங்கும் போது அந்த நபர் கோவிட்-19 கட்டுப்பாட்டு அறைக்கு தனக்கு கரோனா பாசிட்டிவ் என்ற நிலையைத் தெரிவித்தார்.

இவருக்கு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாததால் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

கரோனா டெஸ்ட்டுக்கு சாம்பிள்கள் கொடுத்த நபரை எப்படி பயணிக்க அனுமதிக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

அவர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது. மருத்துவ அறிக்கை வரும் வரை அவரைத் தனிமையில் வைத்திருக்க வேண்டும்.

இவர் எப்படி ரயிலில் பயணிக்கலாம் என்ற சர்ச்சை எழ தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 394 posts and counting. See all posts by Jiiva

Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே