கொரோனா பீதி : பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு

கொரோனா பீதியால் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொரோனாவால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் என சென்னையை சேர்ந்த ராஜவேலு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்றும், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன எனவும் தமிழக அரசு விளக்கமளித்து.

இந்த விளக்கத்தை ஏற்ற நீதிமன்றம், ராஜவேலுவின் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், கொரோனா பரவாமல் எடுக்கப்படும் நடவடிக்கைகளை தொடர அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே