தர்பார்’ நடிகைக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களும், தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர்களும் தினசரி கொரனோ வைரசால்பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகினர், அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

அந்த வகையில் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் கொரனோ வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது ’தர்பார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகையும் கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். ’தர்பார்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். இவர் தற்போது கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் குணமாகிவிடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

மேலும் தனக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவினர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பொதுமக்கள் அனைவரும் கவனமாக மாஸ்க் அணிந்து இருக்கவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே