ஒரு லட்சத்தை நெருங்கும் கரோனா தொற்று: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் உயர்வு

நாடுமுழுவதும் புதிதாக 93,249 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுபோலவே கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 513 பேர் பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அதன்படி நேற்று ஒரே நாளில் 93,249 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,24,85,509 கோடியாக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 60,048 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,16,29,289ஆக உள்ளது.

ஒரே நாளில் 513 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். மொத்த பாதிப்பு 1,64,623 ஆக உள்ளது.

நாடுமுழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,91,597 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி 16-ம் தேதி நாட்டில் கரோனா தடுப்பூசி பணி தொடங்கியது. இதுவரை 7,59,79,651 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே