சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தது! – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கொரோனா எதிரொலியால் தற்காலிகமாக காய்கறி, மீன், இறைச்சி கடைகளை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்று சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டது.

இதில் மாநகராட்சி உதவி பொறியாளார், வருவாய் துறை அதிகாரி, காவல் துறை, வியாபாரி பிரதிநிதிகள் ஆகிய நான்கு பேர் கொண்ட 79 குழுக்கள் அமைக்கப்பட்டது.

இந்த கண்காணிப்பு குழுக்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னையில் ஐந்தரை லட்சம் Rt pcr பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தினசரி 15,000 பரிசோதனைகள் மேற்கொள்ள முயற்சிக்கிறோம். குறைந்தது 12,000க்கும் குறைவாக பரிசோதனைகள் செல்லாமல் பார்த்துக் கொள்கிறோம்.

இந்திய அளவிலேயே அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளும் முதல் பெருநகரம் சென்னை. சுமார் 5 லட்சம் பேர் இ- பாஸ்க்கு விண்ணப்பித்துள்ளனர்.

அவற்றில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன

ஷாப்பிங் செய்தால் 10 நாட்களுக்கு தேவையானவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி வெளியில் செல்வதை தவிருங்கள். 60-70% வணிக இடங்களில் கை கழுவும் வசதிகள் செய்யப்பட்டுவிட்டன.

சென்னையில் 80% பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 15% இறப்புகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து முடித்தவுடன் முடிவுகளுக்காக காத்திராமல் உடனடியாக மருத்துவமனைகளில் அட்மிட் செய்கிறோம்” என தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே