கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது நாளான இன்று மதுரை மற்றும் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம், திருப்பூர், கோவை ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார். திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

இதனை தொடர்ந்து தோப்பூரில் அமைக்கப்பட்டு வரும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் தயாராகி வரும் சிறப்பு வார்டை முதலமைச்சர் ஆய்வு செய்கிறார்.

மதுரையில் இருந்து திருச்சி செல்லும் மு.க.ஸ்டாலின், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தைப் பார்வையிடுகிறார்.

மாலை 5 மணிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர், தொடர்ந்து என்.ஐ.டி வளாகத்தில் கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

முதலமைச்சர் வருகையையொட்டி, மதுரை மற்றும் திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே