இந்தியாவில் 2,76,110 பேருக்கு கொரோனா..; தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,76,110 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்பு சற்று குறைந்து 3,874 ஆக உள்ளது. தினசரி கரோனா தொற்று பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமாக வரும் நிலையில், கரோனாவின் கோர தாண்டவத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,76,110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.57 கோடி (2,57,72,400) ஆகவும் அதிகரித்துள்ளது. தினசரி கரோனா தொற்று பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 31,29,878 பேராகவும் குறைந்துள்ளது.

ஒரே நாளில் கரோனா தொற்றால் 3,874 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,87,122 -ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,23,55,440-ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் 3,69,077 குணமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 19 -ஆம் தேதி வரை 32,23,56,187 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. புதன்கிழமை ஒரேநாளில் 20,55,010 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இதுவரை 18,70,09,792 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே