தஞ்சாவூரில் இன்று மேலும் பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா..

கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது…

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 பள்ளிகளில் 168 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மேலும் 12 மாணவர்களுக்கு இன்று தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.

இதேபோல கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையில் மேலும் 10 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கின்றது. இதனால் அங்கே கொரோனா தொற்று பாதித்த மாணவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மாரியம்மன் கோவில் அருகில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் இரண்டு பேருக்கு தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2,170 பேருக்கு முடிவுகள் வரவேண்டிய நிலையில், தற்போது அனைத்து முடிவுகளும் வந்துள்ளன. இதுவரை மாவட்டம் முழுவதும் 148 மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, இதே பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு பல்கலைக்கழகம், இரண்டு கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்டிருந்தது. தற்போது மேலும் 5 மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 8,66,982 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 668 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பினர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 466 பேருக்கும், செங்கல்பட்டில் 138 பேருக்கும், கோயம்புத்தூரில் 109 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோன பரவல் அதிகரித்திருப்பதால்,  முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மக்கள் வெளியே செல்ல வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே