நாக்பூரில் ஒரே இரவில் 1800 பேருக்கு கரோனா: மார்ச் 15 முதல் 21 வரை லாக்டவுன் முதல்வர் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நாளில் 1800 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் மார்ச் 15ம் தேதி முதல் 21ம் தேதிவரை லாக்டவுன் அறிவிக்கப்பட்ட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் அங்காடிகள் மட்டுமே திறந்திருக்கும்.
இது தொடர்பாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, “கடந்த 24 மணி நேரத்தில் நாக்பூரில் 1800 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் வரும் 15ம் தேதி முதல் 21ம் தேதிவரை நாக்பூரில் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் அங்காடிகள் மட்டுமே திறந்திருக்கும்.

கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால், மாநிலத்தின் இன்னும் பிற பகுதிகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும். இது தொடர்பாக அடுத்த இரண்டு நாட்களில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும்” என்றார்.

நாக்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமலில் இருக்கும். கடந்த திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

நாட்டில் அன்றாடம் பதிவாகும் கரோனா தொற்று உள்ளோர் பட்டியலில் 60% மகாராஷ்டிராவில் பதிவாகிறது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் தொடர்ந்து கரோனா பரவல் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே