கொரோனா அச்சம் : அடுத்த 4 வாரங்கள் மிக முக்கியமானவை – பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள அடுத்து வரும் நான்கு வாரங்கள் நமக்கு மிக முக்கியமானவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர், இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநில முதல்வரிடம் பேசினார்.

அப்போது, அடுத்து வரும் மூன்று முதல் நான்கு வாரங்கள் நமக்கு மிக முக்கியமானவை என்றும் அந்த நாட்களில் நாம் மிகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என கூறினார்.

மேலும் சமூக இடைவெளி பழக்கத்தை பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதன் மூலம் வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.

மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மையும் நம்முடைய நாட்டையும் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று கூறிய பிரதமர் மோடி, அரசு திறம்பட செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே