தமிழகத்தில் மே 24-ம் தேதி முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு – எவை இயங்கும்..??

தமிழகத்தில் திங்கள்கிழமை (மே.24) முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், இன்றும், நாளையும் தனியார், அரசு பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எவையெல்லாம் இயங்கும்

* வாகனங்கள் மூலம் காய்கறிகள் , பழங்கள் வினியோகம் செய்யப்படும்.

* மருந்தகங்கள், ஏடிஎம், பெர்டேரால் பங்குகள் இயங்கும்

* உணவகங்களில் காலை 6 முதல் 10 மணி வரையும், பகல் 12 முதல் 3 மணி, மாலை 6 முதல் 9 மணி வரை பார்சல் சேவைக்கும் மட்டும் அனுமதி.

* உரிய வருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்கான மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுகள் அனுமதிக்கப்படும்.

* பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்கலாம்.

* வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றஉம், நாளையும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் செல்லு அனுமதி.

* சிகிச்சைகளுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே