கொலஸ்ட்ரால் என்பது உடலுக்கு தேவையான ஒன்று, ஆனால் நமது உடலுக்கு எந்த கொலஸ்ட்ரால் அவசியமானது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஹெச்டிஎல், எல்டிஎல் என்று இருவகை கொலஸ்ட்ரால் உள்ளது, இதில் ஹெச்டிஎல் என்பது நல்ல கொலஸ்ட்ரால், எல்டிஎல் என்பது கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். அதே சமயம் எந்த கொலஸ்ட்ராலாக இருந்தாலும் சரி அவை மிதமான அளவில் தான் உடலில் இருக்க வேண்டும், அளவுக்கு மீறினால் ஆபத்து உங்களுக்கு தான்.

உங்கள் மொத்த கொழுப்பு 200 மற்றும் 239 mg/dL க்கு இடையில் இருந்தால், அது கொஞ்சம் அதிகமானதாக பார்க்கப்படுகிறது. இது 240 mg/dL ஐ விட அதிகமாக இருந்தால் அதிகமாகக் கருதப்படுகிறது. உங்கள் எல்டிஎல் கொழுப்பு 130 மற்றும் 159 mg/dL க்கு இடையில் இருந்தால், அது கொஞ்சம் உயர்வாகக் கருதப்படுகிறது.

இது 160 mg/dL ஐ விட அதிகமாக இருந்தால் உயர்வாகக் கருதப்படுகிறது. உங்கள் ஹெச்டிஎல் கொழுப்பு 40 mg/dL க்கும் குறைவாக இருந்தால் அது மோசமானதாகக் கருதப்படுகிறது.

அதேசமயம் சில வாழ்க்கை முறைகள், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மற்றும் சில மருந்துகள் மூலம் நம்மால் உடலில் கொலஸ்ட்ரால் படிவத்தை தடுக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் முடியும். பொதுவாக உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்தி கொண்டாலே கொலஸ்ட்ரால் அளவை சமன்செய்ய முடியும்.

மேலும் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

டார்க் சாக்லேட் போன்ற கோகோ டெரிவேட்டிவ்களில் 70%க்கும் அதிகமாக பாலிஃபினால்கள் உள்ளன, அவை நமது உடலில் நல்ல கொழுப்பை (ஹெச்டிஎல்) அதிகரித்து நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவிபுரிகிறது.

கொலஸ்ட்ரால் அளவு குறைவதால் உடலில் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு போன்றவை கட்டுக்குள் இருந்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றது.

Cacao பவுடரை விட cocoa பவுடரை பயன்படுத்துவது நல்லது என்று கூறப்படுகிறது, ஏனெனில் cocoa பவுடரில் பாலிஃபீனால்கள் அதிகமாக உள்ளது, இது கொலஸ்ட்ராலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே