குழந்தைகளுக்கு மாஸ்க் கூடாது – மத்திய அரசு

5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு முககவசம் அணிவிக்க கூடாது என சுகாதார அமைச்சகம் தனது புதிய வழிகாட்டல் நெறிமுறையில் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டலில், 6 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு, பெற்றோர் அல்லது மருத்துவர்களின் கண்காணிப்பில் மட்டுமே முககவசம் அணிவிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போன்று 18க்கும் குறைவான வயதினருக்கு, கொரோனோ சிகிச்சை அளிக்கும் போது, ரெம்டெசிவர் மருந்தை பரிந்துரைக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பிரிவினருக்கு கட்டப்படுத்த அளவில் மட்டுமே நெஞ்சக CT ஸ்கேன்களை எடுக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே