நாட்டிலேயே அதிக தேசிய விருதுகளை வென்ற மாநில அரசு தமிழக அரசு – முதல்வர் பழனிசாமி பெருமிதம்..!!

அதிமுக.,வை சில புல்லுருவிகள் வீழ்த்த சதி செய்வதாக கூறியுள்ள முதல்வர் பழனிசாமி, அதிமுக.,வை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்ந்து போவார்கள் என கூறினார்.

அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: அதிமுக.,வையும் ஆட்சியையும் விமர்சிப்பவர்கள், தங்களது குடும்பத்திற்காக உழைத்து கொண்டுள்ளனர்.

ஆனால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களும் நாட்டுக்காக உழைத்தனர். இரு தலைவர்களுக்கும் வாரிசு இல்லை, அவர்களுக்கு மக்கள் தான் வாரிசு.

எதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்ஜிஆர் பெயர் உள்ளது. கட்சியில் இருந்து தனி அணியாக பிரிந்து சென்றவர்கள் எந்த கட்சியிலும் மீண்டும் இணைந்ததில்லை. 

ஆனால், அதிமுக.,வில் மட்டுமே பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். தமிழக வரலாற்றிலேயே 9 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான்.

9 ஆண்டுகள் ஆட்சி செய்து அனைத்து துறைகளிலும் சிறப்பான சாதனை படைத்துள்ளோம்.

ஜெ., மறைந்த பிறகும் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறோம். அதிமுக.,வை சில புல்லுருவிகள் வீழ்த்த சதி செய்கின்றனர்.

அதிமுக.,வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்.

ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள ஒரே கட்சி அதிமுக தான். நான் அதிமுக.,வின் தொண்டனாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன்.

கட்சிக்கும், தலைமைக்கும் விஸ்வாசமுள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு இல்லம் தேடி பதவி வரும்.

இந்தியாவிலேயே அதிமுக.,வில் மட்டும் தான் கட்சித்தொண்டனும் முதல்வராகலாம்.

இன்று நான் முதல்வராக இருக்கலாம், ஓபிஎஸ் (பன்னீர்செல்வம்) முதல்வராக இருக்கலாம். நாளை மற்ற தொண்டர்களும் முதல்வராகலாம்.

ஸ்டாலினின் பொய் பரப்புரைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிகம் பேர் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழகம் தான்.

ஒற்றுமையின் மூலம் எதனையும் வெல்லும் சக்தி அதிமுக.,விடம் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: ஏழை பிள்ளைகளின் பசியை போக்க சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தவர் எம்ஜிஆர். ஜெயலலிதா வழியில் அதிமுக சிறப்பான ஆட்சி செய்து வருகிறது.

அதிமுக.,வில் சாதாரண தொண்டராக இருப்பது கூட பெருமைக்குறியது.

இந்தியாவில் அனைத்து மாநிலத்திற்கும் தமிழகம் எடுத்துக்காட்டாக உள்ளது. மக்களுக்கு தேவையானதை உணர்பூர்வமாக சிந்தித்து செயல்படுத்தும் அரசாக தமிழக அரசு உள்ளது.

2023ம் ஆண்டுக்குள் ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே