அர்ச்சகர்களுக்கு நிவாரண நிதி – ஜூன் 3ல் வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள திருக்கோவில் பணியாளர்கள் 14ஆயிரம் பேருக்கு தலா 4ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளார்.

இது குறித்த செய்திக்குறிப்பில், ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டு கிடக்கும் சூழலில், அங்கு பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தலா 4ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூபாய் 4000 உதவி தொகை மற்றும் 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருள்கள் கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும்; ஜூன் மூன்றாம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று இந்த நிவாரண உதவிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். 

இதனால் அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் தங்களுடைய நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே