நிவர் புயல் பாதிப்பு பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு..!!

சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னை நகர், புற நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நிரந்தர தீர்வு காண ஆய்வு செய்தேன்.

செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முட்டுக்காடு சதுப்பு நில முகத்துவாரத்தை 30 மீட்டர் 200 மீட்டர் ஆக அதிகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் எந்த மாநிலத்திலும் போதிய நிதி இல்லை.

நிதி ஆதாரத்தை பொறுத்து படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். 2004ல் 20 சதவீதமாக இருந்த வீடுகள் தற்போது 80 சதவீதமாக உயர்ந்துள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அரசின் தொடர் நடவடிக்கையால், வெள்ள பாதிக்கும் இடங்கள் தற்போது குறைந்துள்ளது. 2015 மட்டுமல்ல அதற்கு முன்பிருந்தே சென்னையில் தண்ணீர் தேங்கி கொண்டிருந்தது.

மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

வீடுகள் நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் தேங்குகிறது. மழையில் அடித்து வரப்பட்ட கட்டை சிக்கியதால் செம்பரம்பாக்கம் ஏரி மதகு மூட முடியாமல் இருந்தது.

தற்போது எந்த பிரச்சனையும் இல்லை” என துரைமுருகனுக்கு முதல்வர் பதிலளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே