சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு..!!

சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை 7 லட்சத்திற்கும் பார்வையாளர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

44-வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.

துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்த இந்த புத்தக கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது.

இங்கு700ற்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 

இங்கு நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களுக்கான ஓவியம், பேச்சு உள்ளிட்ட அறிவுசார்ந்த போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு சென்றுள்ள நிலையில் கண்காட்சி இன்றுடன் முடிகிறது.

குறிப்பாக நடிகர் கமல் ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வாரம்தோறும் பரிந்துரைத்த புத்தகங்கள் தனி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே