உயர்ந்து வரும் கரோனா தொற்று பரவலின் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளையும் ஒத்தி வைப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோன பரவல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.