“மணல் கடத்தல் தொடர்ந்தால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணை தான்”: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை!!

மணல் கடத்தல் தொடர்ந்தால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மணல் எடுப்பது தொடர்பாக நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தும், தினமும் 10 வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும் சவுடு மண் எடுப்பதற்கு பெறும் அனுமதி முறையாக பின்பற்றப்படுவது குறித்து ஆய்வு செய்யப்படுகிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அகழாய்வு நடக்கும் இடத்தில் மணல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிடக் கொரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சிவகங்கை ஆட்சியர் புகைப்படத்துடன் கூடிய அறிக்கை தர உத்தரவிட்டு, செப்டம்பர் 7ம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே