சாத்தான்குளம் வழக்கில் 5 போலீசாருக்கு 3 நாட்கள் சிபிஐ காவல்

சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 காவலர்களையும் 2 நாட்கள் சி.பி.ஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் தொடர்புடைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் முத்துராஜா, முருகன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 5 பேரையும் சி.பி.ஐ காவலில் விசாரிக்க அனுமதிக்க கோரி சி.பி.ஐ கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா சார்பில் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது கைது செய்யப்பட்ட 5 பேரும் சி.பி.ஐ காவலில் செல்ல சம்மதம் தெரிவித்ததோடு விசாரணையின் போது வழக்கறிஞர்களுக்கு அனுமதி வேண்டும் என ரகுகணேஷ் மற்றும் ஸ்ரீதர் தரப்பில் கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து நீதிபதி அவர்கள் 5 பேரையும் 2 நாட்கள் சி.பி.ஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தும் ஜூலை 16 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் ரகுகணேஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் வழக்கறிஞர் சந்திக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

அவர்கள் 5 பேரையும் 2 நாட்களும் சாத்தான்குளம் அழைத்து சென்று விசாரிக்க சி.பி.ஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே