சர்ச்சைக்குரிய யூ ட்யூபர் மாரிதாஸ் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

யூ – டியூப்பில் அரசியல் விமர்சனங்கள் கொண்ட வீடியோக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் மாரிதாஸ். பாஜக ஆதரவாளராக அறியப்படும் அவர் அண்மையில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சமீபத்தில் பிரபல நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர்கள் குணசேகரன் உள்ளிட்ட சிலர் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர் எனக்கூறி பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.

மேலும், இது தொடர்பாக விசாரிக்கவுள்ளதாக நியூஸ் 18 தொலைக்காட்சி நிர்வாகம் தனக்கு இமெயில் அனுப்பியதாகவும் கூறி ஆதாரத்தை காட்டினார்.

ஆனால், அது தன்னுடையை டிவிட்டர் கணக்கே இல்லை, அது போலி என நியூஸ் 18 நிர்வாக இயக்குனர் உண்மையை போட்டு உடைத்தார்.

மேலும், மாரிதாஸ் மீது தவறான தகவலை பரப்புவதாக நியூஸ்18 நிர்வாகம் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மாரிதாஸ் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே