பெற்றோரின் கருத்தை கேட்டறிந்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

பொங்கலுக்கு பிறகு 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா? என்பது பற்றி முடிவு செய்ய நேரில் ஆய்வு செய்தார்.

பள்ளிகள் திறப்பு பற்றி கருத்து கேட்பு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த நிலையில் ஆய்வு நடைபெறுகிறது.

அரசு பள்ளியில் வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் ஆய்வு செய்த பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், ” பெற்றோரின் கருத்தை கேட்டு அறிந்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும்” என்றார்.

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்து கேட்கப்படும்.

மாணவர்கள் – பெற்றோர்களிடம் இந்த வாரம் இறுதிவரை கருத்து கேட்கப்படும். பள்ளிகள் திறந்த உடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்றார்.

அதேபோல் பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்பு விடுமுறை குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே