கொரோனா வைரஸை நிஜமாகவே மூலிகைகள் மூலம் குணப்படுத்த முடியுமா? மக்கள் மனநிலை என்ன?

மூலிகைகளில் நிறைய அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. ஆனால் மூலிகைகள் சாறு மட்டுமே கொரோனா வைரஸை குணப்படுத்துமா இது குறித்து ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் வாங்க தெரிஞ்சுக்கலாம்
கொரோனா வைரஸ் பீதியில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பதே மக்களின் நோக்கமாக உள்ளது. இதற்காக நிறைய மக்கள் மூலிகைகள் மருந்துகளை நம்பி இருக்கிறார்கள். இது கொரோனா வைரஸை குறைக்கும் மூலிகை என்றால் போதும் மக்கள் அதை கண்மூடித்தனமாக பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த வகையில் பார்க்கும் போது சோமவல்லி, துளசி, புதினா போன்ற மூலிகை பானங்களை நிறைய மக்கள் வீட்டிலேயே தயாரித்து குடிக்க ஆரம்பித்து விட்டனர். நிறைய பேர் இந்த மூலிகைகளை வீட்டில் வளர்க்கவும் முற்பட்டு உள்ளனர். இந்த மூலிகைகளை ஜூஸாகவோ அல்லது பொடியாகவோ பயன்படுத்தி வருகிறார்கள்.
​ஆயுர்வேதம் மாற்று மருந்தாகுமா?
ஓமவல்லி மூலிகை சாற்றை அருந்துவது உங்களை காய்ச்சலில் இருந்து விடுபட உதவும். காய்ச்சல், இருமல், சளி போன்ற சுவாசப் பிரச்சனைகளை சமாளிக்க இந்த மூலிகைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நமக்கு உதவுகின்றன. ஆனால் இந்த மூலிகை கோவிட் 19 க்கு மாற்று மருந்தாக இருக்க முடியாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.

வைரஸ் தடுப்பு மூலிகைகளான இவைகள் சுவாச மறுசீரமைப்புகள், காய்ச்சல் மற்றும் மூச்சுக்குழாய் பிரச்சினைகளை குணப்படுத்துவதில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. கோவிட் 19 யை குணப்படுத்த ஆதரவாக செயல்பட உதவுமே தவிர இதுவே கோவிட் 19 க்கு சிகிச்சை அளிக்காது.

​மருந்து எதுவும் இல்லை
தற்போது எல்லாருக்கும் தெரிந்த ஒரே வார்த்தை நோயெதிரிப்பு சக்தி மட்டுமே. எல்லோரும் நோயெதிரிப்பு சக்தியை எப்படி மேம்படுத்துவது என்றே நினைத்து வருகிறார்கள். ஆனால் ஒரு மூலிகையால் அனைத்தையும் குணப்படுத்த முடியாது என்பதை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

முழுமையாக குணப்படுத்த மூலிகைகளின் சரியான கலவை மற்றும் சிகிச்சை பயன்பாடுகள் அவசியம். இது தற்போதைய காலங்களில் நம்மை திறம்பட செயல்பட உதவுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல மூலிகைகளும் நஞ்சு தான் என்பதை மக்கள் உணர வேண்டும். ஆயுர்வேதம் ஒரு மெதுவான செயல்முறையாகும். எனவே ஆயுர்வேத மூலிகைகள் உங்களுக்கு உடனடி பலன் அளிக்காது.
​ஆயுர்வேத மூலிகைகள்
சில மேற்கத்திய மற்றும் பாரம்பரிய முறைகள் கோவிட் 19 அறிகுறிகளை தணிக்க முயன்றாலும் நோயைத் தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் வைரஸ் தடுப்பு அல்லது சிகிச்சையாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளிட்ட எந்த மருந்துகளையும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இது நீங்கள் எடுத்துக் கொள்ளும் மூலிகை மாத்திரைகளுக்கும் பொருந்தும். சில ஆயுர்வேத மூலிகைகள் தேநீர் அல்லது டானிக்காக தயாரிக்கப்படுகின்றன. மற்றவைகள் காப்யூல்கள், மாத்திரைகள் மற்றும் வாய்வழி டிங்க்சர்களில் வடிவமைக்கப்படுகிறது.

​எடுத்துக் கொள்ளும் அளவு
ஒரு ஆயுர்வேத மூலிகையை ஆன்லைனில் வாங்கினால், ஒரு ஆயுர்வேத பயிற்சியாளர் மூலமாகவோ அல்லது ஒரு சிறப்பு சுகாதார உணவு கடையிலோ வாங்க வேண்டும். எடுத்துக் கொள்ளும் அளவு கட்டை விரலின் அளவை விட அதிகமாக இருக்கக் கூடாது. ஏனெனில் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு பக்க விளைவுகளை உண்டாக்கலாம். இருப்பினும் பரிந்துரைக்கப்பட்ட அளவிலேயே எடுத்துக் கொள்வது நல்லது.
​அதிகமாக எடுத்துக் கொள்வது
உதாரணமாக ஓமவல்லி இலைகளின் அதிகப்படியான பயன்பாடு உங்களுக்கு மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். எனவே நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் ஓமவல்லி இலைகளை பயன்படுத்துவதை தவிருங்கள். ஒரு வேளை நீங்கள் உட்கொண்டால் உங்க இரத்த சர்க்கரை அளவை கண்காணித்துக் கொள்ளுங்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே