இரத்த பரிசோதனை செய்தே கல்லீரல் பாதிப்பை கண்டுபிடிக்க முடியுமா? முடியாதா? உண்மை என்ன

கல்லீரலில் ஏற்படும் அழற்சியை முன்னரே கண்டறியும் விதத்தில் ஆய்வாளர்கள் இரத்த பரிசோதனையை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் கல்லீரல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஒரு புதிய ஆய்வின்படி, சில வருடங்களுக்கு முன்பு மனித இரத்தத்தில் உள்ள பயோமார்க்ஸ் FIB-4 இன் தொடர்ச்சியான அளவீடுகள் கொண்டு கடுமையான கல்லீரல் நோயை உருவாக்கும் அபாயத்தை கணிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்லீரலில் கொழுப்பு குவிந்து கல்லீரல் நோயை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்பு பெரும்பாலும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது. இந்த பாதிப்பு அப்படியே நாளடைவில் கல்லீரல் சிரோசிஸ் அல்லது கல்லீரல் புற்றுநோய்க்கு வழி வகுக்க ஆரம்பித்து விடும். இந்த பாதிப்புகள் சாதாரணமானது என்றால் கூட ஆரம்ப கட்டத்திலயே கண்டறியாமல் இருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடுகிறது.

கல்லீரல் சிரோஸின் அபாயத்தை கண்டறிவது கடினம். இருப்பினும் கல்லீரலின் ஆரோக்கியத்தை வழக்கமான இரத்த பரிசோதனையின் மூலம் முன்னரே கண்டறிந்து பாதிப்பை குறைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது குறித்து ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் ஒவ்வொரு சில வருடங்களுக்கும் மனித இரத்தத்தில் உள்ள பயோமார்க்ஸ் எஃப்ஐபி -4 ஐ மீண்டும் மீண்டும் அளவிடுவதால் கடுமையான கல்லீரல் நோய் உருவாகும் அபாயத்தை கணிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். ஹெபடாலஜி ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இந்த பயோமார்க்கரின் அளவு இரண்டு சோதனை நிகழ்வுகளுக்கு இடையில் அதிகரித்தால் நமக்கு கல்லீரல் சிரோசிஸ் ஆபத்தும் அதிகரிக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆண்களை விட பெண்கள் கல்லீரல் சிரோசிஸால் இறப்பது குறைவு:
கல்லீரல் சிரோசிஸின் அதிக ஆபத்தில் உள்ளவர்களை FIB-4 மதிப்பெண் கொண்டு அடையாளம் காண முடியும். FIB-4 மதிப்பெண் கொண்டு அதிக ஆபத்தில் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்கான துல்லியத்தை அதிகரிக்க முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஒரே ஒரு தடவை FIB-4 ஐ அளவிடுவதை விட, FIB-4 மதிப்பெண்ணின் தொடர்ச்சியான மாதிரி மற்றும் அளவீடுகள் எதிர்கால கல்லீரல் சிரோசிஸின் கணிப்பை அதிகரிக்கக்கூடும் என்று இந்த புதிய ஆய்வு காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் 1985 மற்றும் 1996 க்கு இடையில் கணக்கெடுக்கப்பட்ட மிகப் பெரிய மக்கள்தொகையில் ஆய்வக சோதனைத் தரவைக் கொண்ட ‘அமோரிஸ்’ கூட்டணியை ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சிக்காக பயன்படுத்தினர்.

இதன்படி 40, 000 க்கும் அதிகமானோர் FIB-4 க்கான இரத்த பரிசோதனை தரவுகளுக்கு பங்களித்தனர். 27 ஆண்டுகள் வரை சிரோசிஸை உருவாக்கியவர்களை அடையாளம் காண தேசிய பதிவேட்டில் அந்த தரவுகளை பத்திரமாக பின்பற்றினர். இதன் முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், இரண்டு சோதனை நிகழ்வுகளுக்கு இடையில் FIB-4 மதிப்பெண் உயரும் மற்றும் குறையும் போது நபர்களில் கல்லீரல் பாதிப்பு ஆபத்து அதிகரிக்கிறது.இந்த முறையின் மூலம் பின்னாளில் சிரோசிஸால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் அடையாளம் காணப்பட முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
தவறான சோதனை முடிவுகள் வர வாய்ப்புள்ளதா

ஒரு சிக்கல் என்னவென்றால், துல்லியம் ஒப்பீட்டளவில் குறைவாக FIB அளவை கொண்டிருப்பது தவறான-நேர்மறை சோதனைகளின் முடிவு ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதனால் சிரோசிஸை கண்டறிய நீண்ட நேரம் பிடிக்கும் என்றும் பல வருட இடைவெளியில் FIB-4 மதிப்பெண்ணை மீண்டும் கணக்கிடுவதற்கு இது போதுமானதாக இருக்கலாம் என்றும் ஆய்வு உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில் இதன் மூலம் எளிதாக சிரோசிஸ் அபாயத்துடன் கூடிய முதன்மை கவனிப்பில் உள்ளவர்களை அடையாளம் காண இந்த பயோமார்க்கர் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வு காட்டுகிறது. அவர்கள் மிகவும் கவனமாக கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் மற்றவர்கள் பாதிப்பை குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதையும் தெளிவாக காட்டுகிறது. ஆனால் தவறான-நேர்மறையான கண்டுபிடிப்புகளின் அபாயத்தைக் குறைக்க இந்த முறை மேலும் உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில் தவறான முடிவு ஆரோக்கியமான மக்களின் தேவையற்ற பரிசோதனைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இயற்கையான வழியில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி?

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமும், தவறாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். ஆல்கஹாலை தவிர்த்து ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும். ஏனெனில் அதிலுள்ள நச்சுகள் உங்கள் கல்லீரலில் உள்ள செல்களை காயப்படுத்தி சேதப்படுத்தும். சுற்றுப்புறத்தை தூய்மை செய்யும் போது, ஏரோசல் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் நேரடி தொடர்பு கொள்ளாமல் கவனமாக இருங்கள். ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிருங்கள், புகைப்பிடித்தலை தவிருங்கள். இந்த நடவடிக்கைகள் உங்க கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே