#Breaking :விழுப்புரம் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!

விழுப்புரம் ஆயுதப்படை 2 ஆம் நிலை காவலர் ஏழுமலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதி காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் குறித்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். கடந்த சில வருடங்களாக காவல்துறையில் உள்ளவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்த நிலையில் விழுப்புரம் ஆயுதப்படை 2 ஆம் நிலை காவலர் ஏழுமலை என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, கடந்த மார்ச் மாதம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன், கடந்த 2013-ம் ஆண்டு ஆயுதப்படை காவலர் பணியில் சேர்ந்துள்ளார். இவர் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணியில் கடந்த சில நாட்காளாக பணியாற்றி வந்த நிலையில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு ஆயுதப்படை காவலர் தன் உயிரை மாய்த்துக்கொண்டது காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே