BREAKING – உள்நாட்டு விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு மே 4ம் தேதி முதல் தொடக்கம்

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரெயில், விமான போக்குவரத்து சேவையும் வரும் மே 3 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில், மே 4 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று ஏர் இந்தியா நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

அதேபோல், ஜூன் 1 ஆம் தேதி முதல் சர்வதேச விமானங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் எனவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இதனையடுத்து ஊரடங்கால் தங்கள் சொந்த ஊருக்கும் சொந்த நாட்டிற்கும் செல்ல முடியாமல் தவித்து வருபவர்களுக்கு மே 4 முதல் விமோசனம் பிறக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே