#BREAKING : ஜார்க்கண்டில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது முடக்கம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலில் உள்ள 5ஆம் கட்ட பொது முடக்கம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

எனினும், கரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் ஜூன் 30க்குப் பிறகும் நாடு முழுவதும் பொது முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்கிற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது முடக்கம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பொது முடக்க காலத்தில் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லூரிகள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து, அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை அறிவித்திருந்தார்.

தற்போது மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே