தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் நடைபெறும் மது விற்பனையை, டிஜிட்டல் மயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.
கடைகளில் மதுபானங்களின் இருப்பு மற்றும் விற்பனை தற்போது அறிக்கைகளாக தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இதனை டிஜிட்டல் மயமாக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் அலுவலகங்களை சர்வர் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கும் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.