#BREAKING : அனைத்து அரிசி அட்டைத்தாரர்களுக்கும் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் – தமிழக அரசு!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலை இன்றி அரிசி என்பது வழங்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் முதல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஜூன் மாதம் வரை இருந்த நிலையில், ஜூலை மாதமும் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். 

இதையடுத்து, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் வருகிற நவம்பர் மாதம் இலவசமாக வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

ஜூலை மாதம் இலவச ரேஷன் பொருள்கள் அறிவிப்பு கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியானது.

எனவே ஜூலையில் முதல் மூன்று நாள்கள் மக்கள் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கியிருந்தால் ஆகஸ்ட் மாதம் ரேஷன் பொருள்கள் வாங்க வரும்போது தொகை திருப்பித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே