கொரோனா பாதிப்பில் இந்தியாவை முந்தி 2ம் இடம் பிடித்தது பிரேசில்

இடையில் சிறிதளவு கட்டுக்குள் வந்த கொரோனா பரவல் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளிலும் மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

உலகளவில் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளின் வரிசையில் பிரேசில் 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏழை, பணக்கார நாடுகள் என்ற பேதமில்லாமல் உலக மக்கள் அனைவரும் தொற்று நோயால் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இடையில் சிறிதளவு கட்டுக்குள் வந்த கொரோனா பரவல் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளிலும் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியாவை முந்தி பிரேசில் 2ம் இடத்துக்கு வந்துள்ளது. இந்தியா கொரோனா பாதிப்பில் 3ம் இடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,000 என்ற அளவில் உள்ள நிலையில் பிரேசிலில் இந்த எண்ணிக்கை 70,000 என்ற அளவில் உள்ளது. அங்கு தினசரி உயிரிழப்பும் 2,000ஐ நெருங்கி வருகிறது.

இந்தியாவில் தற்போது வரை 11,359,048 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரேசியில் இந்த எண்ணிக்கை இந்தியாவைக் காட்டிலும் 80,000 அதிகம் ஆகும். அங்கு 11,439,250 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா நீடித்து வருகிறது.

கொரோனா பாதிப்பில் டாப் 10 நாடுகள்:

1. அமெரிக்கா – 30,043,662
2. பிரேசில் – 11,439,250
3. இந்தியா – 11,359,048
4. ரஷ்யா – 4,380,525
5. பிரிட்டன் – 4,253,820
6. பிரான்ஸ் – 4,045,319
7. இத்தாலி – 3,201,838
8. ஸ்பெயின் – 3,183,704
9. துருக்கி – 2,866,012
10. ஜெர்மனி – 2,569,850

உலகளவில் ஒட்டுமொத்தமாக 120,066,914 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,659,986 பேர் உயிரிழந்துள்ளனர். 96,592,340 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரையில் மகாராஷ்டிராவில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 15,000 என்ற அளவில் தினசரி பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரில் தான் முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரில் தான் 15,000 என்ற அளவை மகாராஷ்டிரா தொட்டது.

மும்பையில் 2021ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி 239 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, பிப்ரவரி 11 அன்று 624 ஆக உயர்ந்தது. அதுவே மார்ச் 11ம் தேதி 1,508 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே