கமல், ரஜினி ஆகியோரை பாஜக இயக்குகிறது : தமிமுன் அன்சாரி

கமல், ரஜினி ஆகியோரை பாஜக இயக்குவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் சித்தார்த்திடம் இருந்து ரஜினிகாந்த் பாடம் கற்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தர முயற்சிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுவது இரட்டை நாக்கு பேச்சாக உள்ளது என்றும் தமிமுன் அன்சாரி விமர்சித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே