பெண்கள் மீதான தாக்குதலை பாஜக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது – எல்.முருகன்

பெண்களை தாக்குவதும், பெண்களை அடக்குவதையும் பாஜக பார்த்துக் கொண்டிருக்காது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் பிரதிநிதிகள் மாநாடு ராணிப்பேட்டையில் நடைபெற்றது.

அதில் பேசிய மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் பல தரப்பு மக்களும் தற்போது பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்றும், தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பறந்து கொண்டிருக்கிறது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் நேற்று திமுகவின் மக்கள் சபை கூட்டத்தில் பெண் ஒருவர் கேள்வி எழுப்பிய விவகாரம் குறித்து பேசினார். 

பெண்களை தாக்குவதையும், பெண்களை அடக்குவதையும் என்றும் பாரதிய ஜனதா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என கூறினார்.

என்றும் பொய் பிரச்சாரம் செய்து வரும் திமுகவின் தலைவர் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் பெரிய பாடம் புகட்ட வேண்டும் என்றும்; தேசிய ஜனநாயக கூட்டணி மூலமாக அறிவிக்கப்படும் முதலமைச்சர் தமிழகத்தில் ஆட்சி செய்வார் எனவும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே