பிக் பாஸ் புகழ் நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் காலமாகியுள்ளார்.

பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்றவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் லாஸ்லியா. அர்ஜூன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

லாஸ்லியாவின் தந்தை மரியநேசன், கனடாவில் வசித்து வந்தார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்துள்ளார்.

இதையடுத்து இயக்குநர் சேரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் மரியநேசனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

ட்விட்டரில் இயக்குநர் சேரன் கூறியதாவது:

லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித் தாங்குவாய் மகளே.

சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே