#61YearsOfKamalism : உடலை வருத்தி உச்சம் தொட்ட உலகநாயகன் – கமலுக்கு பாரதிராஜா வாழ்த்து!

காதல் மன்னன் ஜெமினி கணேசன் மற்றும் நடிகையர் திலகம் சாவித்ரி அவர்களின் நடிப்பில் 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் “களத்தூர் கண்ணம்மா”.

இத்திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது நடிப்பு மட்டுமின்றி பன்முகத் தன்மையின் மூலம் இன்று பல நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் அறிமுகமாக விளங்குபவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள்.

இன்றோடு அவரது கலைப்பயண வாழ்க்கை 61 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ’61 ஆண்டுகளான கமல்ஹாசன்’ என்ற ஹேஷ்டேகின் மூலம் பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இந்திய திரை உலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து பல்வேறு தொழில் நுட்பங்கள், பல நூறு கதாபாத்திரங்கள் என்று உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன் என் கமலுக்கு வாழ்த்துக்கள் அன்புடன் பாரதிராஜா’ என்று கூறி கமல்ஹாசன் அவர்களை டேக் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய திரைப்படங்களில் “16 வயதினிலே” திரைப்படம் என்றும் ரசிகர்கள் மனதை கவர்ந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே