லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த 4-ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து உலகையே உலுக்கியது.
இந்த விபத்தில் இதுவரை 158 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், 6000 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர்.
வெடி விபத்து நடந்த இடத்தை சுற்றி 15 கிலோ மீட்டருக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க அந்நாட்டு பிரதமர் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். சுற்றுச்சூழல் அமைச்சரும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும் ராஜினாமா செய்ததோடு, பிரதமர் ஹசன் டியப் மக்களை காக்க தவறிவிட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
பெய்ரூட் துறைமுகத்தில் பூமிக்கு அடியில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்த அமோனியம் நைட்ரேட் என்ற ஆபத்தான வேதிப்பொருள் வெடித்ததால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
6 மாதங்களுக்கு முன்னரே அந்த அமோனியம் நைட்ரேட் சேமிப்பு கிடங்கை அப்புறப்படுத்த நிபுணர் குழு அறிவுறுத்தியதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வெடி விபத்தின் போது கட்டடங்கள் வெடித்து நொறுங்கும் போது, எடுக்கப்பட்ட புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் விபத்து நடக்கும் போது என்ன நடந்தது என்பது தெளிவாக பதிவாகியுள்ளது.