வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தப் பகுதி..!!

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது… அதாவது நாளை உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

காற்றழத்த தாழ்வு பகுதியால் தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் அதீத மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது.. இதனால் தென்மேற்கு பருவகாற்று காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது… குறிப்பாக சென்னையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே சாயங்கால நேரங்களில் நல்ல மழை பெய்கிறது.. சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது..

அந்த வகையில், கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 2 மாவட்டங்களை தவிர மற்ற 36 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை பதிவான இயல்பான அளவை விட அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது. கடந்த 13 வருஷங்களில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் தென் மேற்கு பருவமழை காலத்தில் மழை பதிவாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மிதமான மழை

இப்போது தமிழகத்தில் இனியும் தொடர்ந்து மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.. மேலும் தென்மேற்கு பருவகாற்று காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

தாழ்வு பகுதி

இந்நிலையில், வடமேற்கு வங்க கடல் பகுதியில் 23-ந் தேதி அதாவது நாளைய தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.. அதனால், 23, 24 மற்றும் 25-ந் தேதிகளில் நீலகிரி, கோவையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்திருந்தது.

மழைக்கு வாய்ப்பு

ஆனால், வட மேற்கு வஙகக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.. அதாவது நாளை உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக இன்று உருவாகி உள்ளது. இதனால், தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே