களத்திலும் வெளியிலும் இங்கிலாந்து விக்கெட்டுகளைச் சாய்க்கும் அஸ்வின்: வாசிம் ஜாஃபரின் ட்வீட்

“களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இங்கிலிஷ் விக்கெட்டுகளைச் சாய்க்கும் அஸ்வின்” என்று புகழ்ச்சியா, அல்லது விமர்சனமா என்று தெரியாத ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார் வாசிம் ஜாஃபர்.

அகமதாபாத்தின் மோசமான பிட்சுக்கு முட்டுக் கொடுத்து அஸ்வின் மெய்நிகர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். நல்ல பிட்ச் என்றால் என்ன என்று கேட்டார், யார் அதற்கு விளக்கம் கொடுப்பது என்று பிரிட்டிஷ் பத்திரிகையாளருக்கு கேள்வி எழுப்பினார்.

அகமாதாபாத் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிந்து போனது, நேர்நேர்தேமா பவுலர் அக்சர் படேல் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அவர்பந்துகள் திரும்பும் என்று நினைத்து இங்கிலாந்து வீரர்கள் ஏமாந்தனர். ஓரிரு பந்துகள் அவரையும் அறியாமல் குழிப்பிட்சில் திரும்பிவிட அதை இங்கிலாந்து வீரர்கள் நிரந்தரமானதென்று கருதி ஆடினர், ஆனால் மற்ற பந்துகள் திரும்பவில்லை நேராக வந்து முழங்காலுக்குக் கீழ் சென்று எல்.பி. அல்லது பவுல்டு ஆக்கியது.

பிட்ச் குறித்த கேள்விகளை நேர்மையாக எதிர்கொள்ளாமல் அல்லது குறைந்தது அது பற்றி பேசாமல் இருப்பதன் மூலம் நாகரீகத்தைக் காக்க முயலாமல் எதிர்க்கேள்வி கேட்டு இன்னும் விமர்சனங்களையே எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே