தமிழகத்தில் ஜூன் 5 வரை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களாக 316 பகுதிகள் உள்ளன

தமிழகத்தில்,16 மாவட்டங்களில் மட்டுமே 316 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு பகுதிகள் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் கடந்த ஜூன் 5-ம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்டு பகுதி குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில் , தமிழகத்தில், 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை எனவும், 16 மாவட்டங்களில் மட்டுமே 316 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழக அரசு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட வாரியான விவரங்களை அரசாணையாக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,நேற்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில், கடந்த 9 நாட்களாக 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 33,229 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே