சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!

நில அபகரிப்பு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, இழப்பீடு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

நில அபகரிப்பு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகளில் மக்கள் பிரதிநிதிகள் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தல்.

இது தொடர்பாக புகார்கள் வந்தால், புறந்தள்ளாமல், தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே