ஆந்திர மாநில துணை முதல்வர் அம்ஜத் பாஷாவுக்கு கொரோனா தொற்று..!

தமிழகம் உள்பட இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உலகின் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் தற்போது 8.50 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்தியாவில் பாமர மக்கள் மட்டுமன்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்பட பல பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல அமிதாப், அனுபம்கெர் குடும்பத்தினர் உள்பட பல திரையுலக பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி ஆந்திர மாநில துணை முதல்வர் அம்ஜத் பாஷா அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக துணை முதல்வருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் தெரிகிறது. 

இதனை அடுத்து அவர் தற்போது திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே