மரங்களின் நெருக்கத்தினால் சூரிய வெளிச்சத்தையே பார்க்காத பூமி, வருடம் முழுவதும் கொட்டும் மழை என்ற சூழலில் தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது தான் அமேசான் காடு. அபூர்வமான எண்ணற்ற விலங்குகளும் பறவைகளும் இந்தக் காட்டில் வசிக்கின்றது.

பிரம்மாண்டங்கள் பலவற்றை கொண்டிருக்கும் அமேசான் மழைக்காடு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

உலகில் உள்ள அனைத்து காடுகளுக்கும் ராஜாவாக விளங்கும் அமேசான் ஏராளமான பொக்கிஷங்களை உள்ளடக்கியுள்ளது.

மரங்களின் நெருக்கத்தினால் சூரிய வெளிச்சத்தையே பார்க்காத பூமி, வருடம் முழுவதும் கொட்டும் மழை என்ற சூழலில் தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது தான் அமேசான் காடு. அபூர்வமான எண்ணற்ற விலங்குகளும் பறவைகளும் இந்தக் காட்டில் வசிக்கின்றது.

அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த காட்டுக்குள் சென்றால் எளிதில் திரும்பி விட முடியாது. காரணம் அங்குள்ள இயற்கை அமைப்பு, விலங்குகளின் தன்மை, இருட்டும் தான்.

அமேசான் காடு உலகின் நுரையீரல் இல்லை: பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ  ஐ.நாவில் உரை - BBC News தமிழ்

பிரேசில், வெனின்சுலா, கொலம்பியா என 9 நாடுகளை எல்லையாகக் கொண்டு 55 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவில் அமேசான் காடு அமைந்துள்ளது.

உலகுக்கு தேவையான மொத்த ஆக்ஸிஜனில் 20 சதவீதத்தை கொடுக்கும் அமேசான் காடு தான் பூமியின் நுரையீரல் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த காட்டில் 40 ஆயிரம் தாவ இனங்கள், 1500 வகையான பறவைகள், 3000 வகை மீன்கள், 1800 வகை பட்டாம்பூச்சிகள், 200 வகை உயிரைப் பறிக்கும் கொசுக்கள் உள்ளன.

அதோடு அனகோண்டா பாம்புகளை சாதாரணமாக அமேசான் நதிக்கரைகளில் பார்க்க முடியும். மேலும் இந்த காட்டில் வசிக்கும் ஈல் மீன் வெளிப்படுத்தும் மின்சாரம் ஒரு நொடியில் மனிதனைக் கொல்லும் சக்தி உடையது.

என் கண்ணில்.!!: அமேசன் மழைக்காடு

அதேபோன்று பிராண மீன்களும் ஹாலிவுட் படத்தில் மட்டுமே நாம் பார்த்துள்ள கொடூர வகை வவ்வால்களும் வாழும் இடமாக அமேசான் காடு அமைந்துள்ளது.

அமேசான் காட்டில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பழ வகைகள் கிடைக்கும். ஆனால், அவற்றில் 200 வகைகளை மட்டுமே நாம் அறிந்திருப்போம். இந்த காட்டில் ஆரம்பத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர். ஆனால், தற்போது 2.5 லட்சம் பேர் மட்டுமே இருக்கின்றனர்.

இதில் மிக முக்கியமானது மற்றும் ஆச்சரியமானது என்னவென்றால் இந்த மக்கள் மொத்தம் 170 மொழிகளை பேசுகின்றனர்.

அமேசான் காடுகள்: `உலகின் நுரையீரல்' வறண்ட புல்வெளியாக மாறும் ஆபத்து...  புதிய ஆய்வு சொல்வது என்ன? | Amazon Forests are on the verge of crossing its  tipping point says a research

இவர்கள் அமேசான் காட்டை தங்களுக்கானது என்று நினைப்பதனால் அங்கு செல்லும் வெளியாட்களை தாக்கி ஓட விடுவார்கள். இதனால், இவர்களை புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால் ஹெலிகாப்டரில் தான் வர வேண்டும்.

அமேசன் காடு செழித்து விளங்க காரணம் அமேசான் நதிதான். 6,992 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நதி உலகின் மிகப்பெரிய ஆற்றுப்படுகை கொண்ட நதியாகக் கருதப்படுகிறது. இந்த காட்டில் உள்ள 90% தாவரங்களை உலகிலுள்ள எந்த தாவர வல்லுநர்களும் ஆராயவில்லை என்பது அசாத்தியமான உண்மை.

மேலும், இந்த அமேசான் காட்டில் சூடான கொதிக்கும் ஆறு ஒன்று அமைந்துள்ளது. இதுதான் கொதிக்கும் ஆறு உள்ள ஒரே இடம் என்றும் கூறப்படுகிறது.

இப்படி பல வினோதங்களை உள்ளடக்கிய அமேசான் காடு எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும் அது உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் நன்மையை விளைவிக்கின்றது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே