ஏர் இந்தியா விமான நிறுவனத்தை முழுமையாக விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 விழுக்காடு பங்குகளை விற்க கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது.
ஆனால் அதனை வாங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.
இந்நிலையில் தற்போது ஏர் இந்தியாவின் 100 விழுக்காடு பங்குகளையும் விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வாங்கும் நிறுவனம் ஏர் இந்தியாவின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை முழுமையாக கையகப்படுத்தலாம்.
வாங்க விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தை வாங்குபவர்கள் அதன் 2,300 கோடி ரூபாய் கடனையும் ஏற்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.