அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும், சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், எஸ்.தேன்மொழி நிலக்கோட்டை தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
6 தொகுதிகளுக்கு மட்டுமே இப்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த கட்டங்களில் மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது அதிமுகவின் வேட்பாளர்களை அனைத்து கட்சிகளும் அறிவிக்கும் முன்பே அறிவித்துவிடுவார்.
தற்போதும் அதேபோல, மற்ற அரசியல் கட்சிகள் அறிவிக்கும் முன்பே அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.