திரைப்பட நட்சத்திரம் விஜயசாந்தி, காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரசில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி, இன்று டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

விஜயசாந்தி உடன் பா.ஜ.க., தலைவரும் மத்திய இணையமைச்சருமான கிஷன் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர்.

நடிகை விஜயசாந்தி, நாளை முறைப்படி,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது விஜயசாந்தியும் பாஜகவில் இணைவது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

2014 ல் விஜயசாந்தி காங்கிரசில் சேர்ந்தார். 1998ல் பாஜகவில் சேர்ந்து அரசியல் வாழ்வைத் துவக்கிய அவர் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியிலும் இருந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே